கடந்த 24 மணிநேரத்தில் 720 துருப்புக்களை இழந்த ரஷ்யா : உக்ரைனுக்கு பெருகும் ஆதரவு!
ரஷ்யா கடந்த 24 மணி நேரத்தில் 720 துருப்புக்களை இழந்துள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 2022 இல் போர் தொடங்கியதிலிருந்து மொஸ்கோவில் மொத்தம் 1,244,560 துருப்புக்கள் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே போரில் தங்களை தற்காத்துக்கொள்வதற்காக உக்ரைனுக்கு கனடா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் இராணுவ உதவிகளை வழங்கியுள்ளன.
பின்லாந்து உக்ரைனுக்கு €43 மில்லியன் இராணுவ உதவித் தொகுப்பை அறிவித்துள்ளது. உக்ரைன் ஆதரவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த உதவி வழங்கப்படுவதாக அந்நாட்டின் ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் (Alexander Stubb) தெரிவித்துள்ளார்.
இதேவேளை உக்ரைனின் வான் பாதுகாப்பை வலுப்படுத்த கனடா AIM ஏவுகணைகளை வழங்கியுள்ளதாக உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர்கள் இன்று அறிவித்துள்ளனர்.




