உக்ரைனுக்கு எதிராக ‘குளிர்காலத்தை’ ஆயுதாக்கும் ரஷ்யா!
ரஷ்யா, உக்ரைன் போரில் உக்ரைன் பக்கம் நிற்கும் ஆஸ்திரேலியா, அந்நாட்டுக்கு மேலதிக உதவித் திட்டத்தை அறிவித்துள்ளது.
இதற்கமைய உக்ரைனுக்கான எரிசக்தி ஆதரவு நிதிக்கு 10 மில்லியன் டொலர்களை ஆஸ்திரேலியா வழங்கியுள்ளது.
ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது. இதனால் வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. குளிர்காலம் என்பதால் மக்கள் பரிதவிக்கின்றனர்.
இந்நிலையிலேயே எரிசக்தி கட்டமைப்பை மீட்க மேற்படி உதவியை ஆஸ்திரேலியா வழங்கியுள்ளது.
“ ரஷ்யா, உக்ரைன் மக்களுக்கு எதிராக குளிர்காலத்தை ஆயுதமாக்குகிறது. இதனை ஏற்க முடியாது. சட்டவிரோத போரை ரஷ்யா முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.”- என்று ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.





