கீரின்லாந்து விடயத்தில் அமெரிக்காவோடு போட்டிக்கு நிற்கும் ரஷ்யா!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆர்க்டிக் தீவைப் பாதுகாக்க விரைவாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கிரீன்லாந்து மக்கள் ரஷ்யாவுடன் சேர வாக்களிக்கலாம் என்று ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வெடேவ் ( Dmitry Medvedev) நேற்று தெரிவித்துள்ளார்.
கிரீன்லாந்தில் வசிக்கும் 55000 மக்களும் ரஷ்யாவுடன் சேர வாக்களிக்கக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அந்நாட்டின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் என சூளுரைத்துள்ளார். இதற்காக இராணுவ பலத்தை பிரயோகிப்பதையும் அவர் மறுக்கவில்லை.
ட்ரம்பின் கூற்றுக்கு எந்த எவ்வித கருத்தும் தெரிவிக்காத ரஷ்யா, தற்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளது.
கிரீன்லாந்தில் ரஷ்யா எந்த உரிமையும் கோரவில்லை என்றாலும், வடக்கு அட்லாண்டிக் பாதைகளில் அதன் நிலைப்பாடு மற்றும் அங்கு ஒரு பெரிய அமெரிக்க இராணுவ மற்றும் விண்வெளி கண்காணிப்பு வசதி இருப்பதால், நீண்டகாலமாக அந்த பகுதியில் நிலைக்கொண்டுள்ளது.
இந்நிலையிலேயே மெட்வடேவின் கருத்துக்கள் வந்துள்ளன.





