இஸ்ரேல் மீதான அக்.7 தாக்குதலுக்கு ரஷ்யா, சீனாவுக்கு தொடர்பு உண்டு ; நிக்கி ஹேலி
இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்.7-இல் நடத்திய தாக்குதலுக்கு ரஷ்யா,சீனா.ஈரான் ஆகிய நாடுகள் பக்கபலமாக இருந்ததகா இந்திய வம்சாவளியை சேர்ந்த ஐ.நாவுக்கான அமெரிக்க முன்னாள் தூதர் நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார்
இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலால் சேதமடைந்த நீர்ஆஸ் பகுதிக்கு வந்திருந்த அவர் இது குறித்து கூறுகையில், கடந்த அக்7 ம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தேவையான உளவுத் தகவலையும் முக்கிய ்உதவிகளையும் ரஷ்யா வழங்கியது. சீனாவின் நிதியுதவி அந்த தாக்குதலை நிறைவேற்ற உதவியது. எனவே அந்தப் படுகொலைகளை நடத்தியது ஹமாஸ் மட்டுமல்ல இந்த 3 நாடுகளும்தான்.
இந்த விவகாரத்தில் நாம் இனியும் அலட்சியம் காட்டினால் அமெரிக்காவிலும் இதே பொன்ற தாக்குதல்களை அந்த நாடுகள் அரங்கேற்றும் என்று அவர் எச்சரித்தார்.
எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்கான ஆதாரம் எதையும் நிக்கி ஹேலி வெளியிடவில்லை. எதிர்க் கட்சியான குடியரசுக் கட்டியை சேர்ந்த நிக்கி ஹேலி, வரும் அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு வாக்களிக்க போவதாக தெரிவித்துள்ளார்.