ஜெலென்ஸ்கி மற்றும் கிரிஸ் பிரதமரை இலக்கு வைத்து ரஷ்யா தாக்குதல்: உக்ரைன் விடுத்துள்ள எச்சரிக்கை
உக்ரைனின் துறைமுக நகரமான ஒடேசா மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாக உக்ரைன் கடற்படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, புதன்கிழமையன்று கிரீஸ் நாட்டின் பிரதமருடன் போரினால் பாதிக்கப்பட்ட நகரத்தை சுற்றிப் பார்க்கச் சென்றபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
துறைமுகத்தில் உக்ரைன் கடற்படை ஆளில்லா விமானங்கள் தங்கியிருந்த ஹேங்கரை வெற்றிகரமாக தாக்கியதாக ரஷ்யா தெரிவித்துள்ளதுடன் இலக்கு எட்டப்பட்டது. இலக்கு தாக்கப்பட்டது” என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஒடெசா துறைமுகத்தில் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அல்லது கிரேக்கப் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் ஆகியோரின் பிரதிநிதிகளை இலக்காகக் கொண்டது என்பதை நிராகரிக்க முடியாது என்று உக்ரேனிய ஜனாதிபதியின் ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தலைவர்கள் கருங்கடல் துறைமுகத்தில் உக்ரேனிய தானிய ஏற்றுமதி வழித்தடத்தை ஆய்வு செய்து கொண்டிருந்த போது ஏவுகணை துறைமுக உள்கட்டமைப்பை தாக்கியது
Zelenskiy மற்றும் Mitsotakis இருவரும் புதன்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் தாக்குதல்களை தாங்கள் பார்த்ததாகக் கூறினார்கள். இந்த தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் கருங்கடல் துறைமுக உள்கட்டமைப்பு ரஷ்ய தாக்குதல்களுக்கு ஒரு நிலையான இலக்காக உள்ளது, இது ஜூலை நடுப்பகுதியில் இருந்து முடுக்கிவிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.