அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மத்தியில் சுரங்க தொழிலாளர்களை தாக்கிய ரஷ்யா!
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா முன்மொழிந்துள்ள வரைவுத் திட்டத்தைப் பற்றி விவாதிக்க உக்ரைன், ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த வாரம் கூடவுள்ளன.
இந்த தகவலை உக்ரைன் ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கமைய இம்மாதம் 04 மற்றும் 05 ஆம் திகதிகளில் அபுதாபியில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தொடர்புடைய அறிவிப்பு வெளியான சில மணிநேரங்களில் ரஷ்ய படைகள் உக்ரைனின் டினிப்ரோ (Dnipro) பகுதியில் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
சுரங்க தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின்மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் 12 தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்தை இயக்கிய நிறுவனமான DTEK இந்த தாக்குதலை பயங்கரவாத தாக்குதலாக விவரித்துள்ளது.





