உக்ரைனில் உள்ள மருத்துவ மையத்தின் மீது ரஷ்யா தாக்குதல் – 8 பேர் மரணம்
வடகிழக்கு உக்ரைன் நகரமான சுமியில் உள்ள மருத்துவ மையத்தின் மீது தொடர்ச்சியாக இரண்டு ரஷ்ய ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதல் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார், அதைத் தொடர்ந்து நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் வெளியேறும் போது மற்றொரு தாக்குதல் நடத்தப்பட்டது என்று உக்ரைனின் உள்துறை அமைச்சர் இஹோர் கிளைமென்கோ தெரிவித்தார்.
உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது டெலிகிராம் சேனலில், ஷாஹெட் ட்ரோன்களைப் பயன்படுத்தி ரஷ்யா மருத்துவமனையைத் தாக்கியதாகக் கூறினார், பதினொரு பேர் காயமடைந்ததாகக் குறிப்பிட்டார்.
(Visited 16 times, 1 visits today)





