கடும் புயலால் பாதிக்கப்பட்ட ரஷ்யா : 08 பேர் உயிரிழப்பு!

ரஷ்யாவில் கடும் புயல் காரணமாக மரங்கள் முறிந்து முகாம்கள் மீது விழுந்த நிலையில், 08 பேர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தகவல்படி, மாரி எல்லில் எட்டுபேர் உயிரிழந்துள்ளதாக நகர மேயர் யெவ்ஜெனி மஸ்லோவ் தெரிவித்தார்.
ஏறக்குறைய 100 மீட்புப் பணியாளர்கள் யால்சிக் ஏரிக்கு அருகிலுள்ள ஒரு முகாமில் குப்பைகளை அகற்றி வருவதாக அவசரகால அமைச்சகம் கூறியுள்ளது. ஒட்டுமொத்தமாக 27 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“விடுமுறைக்கு வருபவர்கள் வானிலை முன்னறிவிப்பை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை” என்று செய்தியிடல் செயலியான டெலிகிராமில் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புயல் தாக்கியபோது யால்சிக் ஏரியின் கரையில் பல நூறு பேர் முகாமிட்டுள்ளனர் என்று அவசரகால அமைச்சகம் மேலும் கூறியது.
(Visited 4 times, 1 visits today)