தொடர்ந்து ஓரம் கட்டப்படும் ருதுராஜ் கெய்க்வாட்! வெளியான காரணம்
பிசிசிஐ கடந்த சனிக்கிழமை வங்கதேசத்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது. இதில் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் இடம் பெறவில்லை.
சுப்மான் கில், ஜெய்ஷ்வால் போன்ற வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்ட போதிலும் ருதுராஜ் கெய்க்வாட் அணியில் இடம் பெறவில்லை. அதேசமயம் அபிஷேக் சர்மா, ரியான் பராக் இடம் பெற்றுள்ளனர்.
இலங்கை தொடரை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ருதுராஜ் கடைசியாக ஜிம்பாப்வேக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இடம் பெற்று இருந்தார்.
ருதுராஜ் தலைமையில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்று இருந்தது. ஆனாலும் தொடர்ந்து அவருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
துலீப் டிராபியில் இந்தியா C அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் ருதுராஜ். மேலும் இரானி கோப்பையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஷுப்மான் கில் அணியில் இருப்பதன் காரணமாக தான் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்ற பேச்சும் பரவலாக இருந்து வருகிறது. கில் சமீபத்தில் இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
ருதுராஜ் கெய்க்வாட் டி20 பேட்டர் தரவரிசையில் 9வது இடத்தில் உள்ளார். தற்போது ரெட் பால் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் இவரை இந்திய டெஸ்ட் அணியில் சேர்ப்பதற்காக பிசிசிஐ யோசனையில் உள்ளதாக கூறப்படுகிறது.