பொழுதுபோக்கு

ரோகினியின் உண்மையை தெரிந்து கொண்ட மீனா! சிறகடிக்க ஆசை சுடச்சுட அப்டேட்….

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றுதான் சிறகடிக்க ஆசை. இந்த கதை ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இன்று வரை மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமான ஒன்றாக உள்ளது.

ஒவ்வொரு வருடமும் சிறந்த ஹீரோ, ஹீரோயின், கதை போன்ற விருதுகளையும் வாங்கி குவிக்கும்.

இதில் வரும் முத்து – மீனா ஜோடிக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளனர். சன் டிவி சீரியல்களுடன் போட்டி போட்டு டி.ஆர்.பியில் முன்னேறி வரும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை.

இப்படி இருக்க இந்த சீரியலில் ரோகிணி மறைத்து வைத்திருக்கும் உண்மையை மையப்படுத்திதான் கதை நகர்கின்றது.

அந்த உண்மை இப்போது மீனாவுக்கு தெரியவந்துள்ளது.

தீபாவளியை கொண்டாட முத்து, மீனா, ரோகிணி, மனோஜ் என அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் அண்ணாமலையின் அம்மா ஊருக்கு செல்கிறார்கள். அப்போது அந்த ஊர் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று தன் தந்தைக்கு திதி கொடுக்க செல்கிறார் ரோகிணி.

அந்த கோவிலுக்கு மீனாவும் வர, அங்கு கிரிஷ், லட்சுமி ஆகியோருடன் ரோகிணி அமர்ந்திருப்பதை பார்த்துவிடுகிறார். அப்போது லட்சுமி, ஐயரிடம், என்னோட ஒரே பொண்ணு கல்யாணி இவதான், இவன் என்னுடை பேரன் என்று கிறிஷ்சை காட்டுகின்றார்.

அதைக்கேட்டு மீனா ஷாக் ஆகிறார். பின்னர் ரோகிணியை தனியே அழைத்து பேசும் போது ரோகினிக்கு பளார் என ஒரு அறைவிடுகிறார். இதனால் ரோகினி கீழே விழுகின்றார். இனி வரும் எபிசோடுகளில் தரமான சம்பவம் காத்திருக்கிறது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!