சூடானில் ரொக்கெட் தாக்குதல் : 16 பேர் பலி!
சூடானின் டார்பூர் பிராந்தியத்தில் இராணுவத்தினருக்கும், துணை இராணுவ படையினருக்கும் இடையில் இடம்பெற்ற ரொக்கெட் தாக்குதலில், குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் கூற்றுப்படி, இது தெற்கு டார்பூர் மாநிலத்தின் தலைநகரான நயாலாவில் நடந்ததாகவும், மேற்கு டார்ஃபூரில் உள்ள மக்களை குறிவைத்து துப்பாக்கி சுடும் வீரர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் கூறியுள்ளனர்.
இந்த தாக்குதல் காரணமாக பல்லாயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் எல்லையைத் தாண்டி வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
சூடானில் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி இராணுவத்தினருக்கும், துணை இராணுவ படையினருக்கும் இடையில் மோதல் வெடித்தது. தற்போது இந்த மோதல் உள்நாட்டு போராக மாற்றமடையலாம் என சர்வதேச அரசியல் நோக்குனர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
(Visited 6 times, 1 visits today)