பிரான்ஸ் ஜனாதிபதியின் பதவிக்கு ஆபத்து? மக்ரோன் வெளியிட்ட தகவல்

பிரான்ஸில் எதிர்வரும் ஜூன் 30 மற்றும் ஜூலை 7 ஆம் திகதி பிரான்சில் பொதுத்தேர்தல் இடம்பெற உள்ளதுது.
இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மக்ரோனின் அரசாங்கம் பெரும்பான்மை ஆசனங்களை பெறாவிட்டால், அவர் பதவி விலகுவாரா எனும் கேள்வி எழுந்துள்ள நிலையில் அதனை அவர் நிராகரித்துள்ளார்.
பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மக்ரோன், அதில் தவறினால் பதவி விலகுவாரா எனும் கேள்விக்கு இல்லை என பதிலளித்திருந்தார்.
2022 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் ஐந்தாண்டுகால ஆட்சிக்கானதாகும். அதன்போது இரண்டு கட்ட வாக்கெடுப்பு இடம்பெற்றது. இரண்டிலேயும் நான் அதிகமாக வாக்குகளைப் பெற்றேன். ஐந்தாண்டுகால ஆட்சிக்கான வாக்காகவே அதைக் கருதுகிறேன் என மிக தீர்க்கமாக மக்ரோன் பதிலளித்தார்.
சட்டமன்றம் கலைக்கப்படுவதாக அறிவித்துள்ள ஜனாதிபதி மக்ரோனே, பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பினையும் வெளியிட்டார். ஐந்தாம் குடியரசில் இதுபோன்ற சம்பவம் பிரான்சில் இடம்பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.