திருகோணமலையில் டெங்கு நோய் பரவும் அபாயம்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
திருகோணமலை மாவட்டத்தில் 17 இடங்களை ஆய்வு செய்த போது டெங்கு குடம்பிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண தொற்று நோயியல் நிபுணர் டொக்டர் எஸ்.அருள்குமரன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணியகத்தில் இன்று (28) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்
”திருவண்ணாமலை மாவட்டத்தில் 17 இடங்களில் டெங்கு தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும் 17 இடங்களில் டெங்கு குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் தவிர்ந்த ஏனைய இடங்களில் ஓரளவு கட்டுப்பாட்டிட்குள் இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருந்தபோதிலும் டெங்கு பரவும் சாத்தியக்கூறுகள் அதிகளவில் காணப்படுகின்றது. டெங்கு தொடர்பில் ஆய்வு செய்த போது அதிகளவிலான இடங்களில் குடம்பிகள் காணப்பட்டடதாவும் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் ஆய்வு செய்த 17 இடங்களில் டெங்கு குடம்பிகள்; கண்டு பிடிக்கப்பட்டதாகவும் இதனால் அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மிக விரைவில் டெங்கு நோய் பரவக்கூடிய சாத்தியக்கூறு இருக்கின்றது.அதிஷ்டவசமாக கடந்த இரண்டு மூன்று மாதங்களாக டெங்கு நோயின் தாக்கமோ மரணங்களோ கிழக்கு மாகாணத்தில் இடம்பெறவில்லை.
ஆகவே மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் சுற்றுபுறச் சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறும் கிழக்கு மாகாண தொற்று நோயியல் வைத்திய நிபுணர் டொக்டர் எஸ்.அருள்குமரன் கோரிக்கை விடுத்துள்ளார்