கடல்மட்டம் அதிகரிப்பு! ஆபத்தில் பசிபிக் தீவு நாடு – காலநிலை விசா வழங்கும் ஆஸ்திரேலியா

பசிபிக் பகுதியில் அமைந்துள்ள சிறிய தீவு நாடான டுவாலுவில் கடல்மட்டம் அதிகரிப்பால் ஏற்படும் ஆபத்தை எதிர்கொண்டு வருகின்றது.
இந்த நிலையில், அதன் குடிமக்களுக்கு காலநிலை விசா வழங்கும் புதிய திட்டத்தை ஆஸ்திரேலியா அறிமுகப்படுத்தியுள்ளது.
மொத்தம் 10000 மக்கள்தொகை கொண்ட டுவாலுவில், இதில் 8,750 பேர் இந்த புதிய விசா திட்டத்தில் பதிவு செய்துள்ளதாக ஆஸ்திரேலிய தூதரகம் தெரிவித்தது.
இது 2024ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் படி செயல்படுத்தப்பட்டதாகவும், இத்தகைய திட்டம் உலகளவில் முதல் முறையாக அமல்படுத்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த முயற்சி, காலநிலை மாற்றத்தின் தாக்கம் மோசமாகும் போது, டுவாலு மக்கள் இடம்பெயர நேரிட்டுள்ளது.
இதனால் கண்ணியமான இடம்பெயர்வு வாய்ப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் விளக்கியுள்ளது.
(Visited 3 times, 3 visits today)