இடைத்தேர்தலில் மோசமான தோல்வியை சந்தித்த ரிஷி சுனக்கின் கட்சி!
பிரித்தானியாவில் நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி, தொழிற் கட்சியிடம் மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது.
இது பிரதம மந்திரி ரிஷி சுனக் மற்றும் அவரது கட்சியின் அடுத்த பொதுத் தேர்தலில் வாய்ப்புகளை மோசமாக்கியுள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.
2019 பொதுத் தேர்தலில் 24,664 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கன்சர்வேட்டி கட்சியானது தற்போது Mid Bedfordshire என்ற நீண்டகால இடத்தை இழந்துள்ளனர்.





