அர்ஜென்டினா தலைநகரை ஆக்கிரமித்துள்ள நுளம்புகள் – கடும் நெருக்கடியில் மக்கள்
அர்ஜென்டினா தலைநகர் போனஸ் அயர்ஸை நுளம்புகள் ஆக்கிரமித்துள்ளதனால் மக்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.
எங்கும் சூழ்ந்திருக்கும் நுளம்புகளை காணொளி எடுத்துச் சமூக ஊடகங்களில் மக்கள் பகிர்ந்துள்ளனர்.
கனத்த மழையால் நுளம்புகளின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளது.
பருவநிலை, சுற்றுச்சூழலைப் பொருத்து 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதுபோன்று நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.
அந்தக் நுளம்புகள் 20 நாள் வரை உயிர்வாழக்கூடியவை. அதனால் அந்தச் சூழல் சில வாரங்களுக்கு நீடிக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரித்தனர்.
குறித்த நுளம்புகளால் டெங்கு போன்ற நோய்கள் பரவக்கூடும். அதைத் தவிர்க்க, பொதுமக்களுக்குத் தொடர்ந்து நுளம்புகள் விரட்டுவதற்கான திரவம் இலவசமாக வழங்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்தது.





