மெஸ்ஸியின் வருகையால் ஏற்பட்ட கலவரம் – நுழைவு கட்டணங்களை திருப்பி வழங்க உத்தரவு
அர்ஜென்டினா(Argentine) கால்பந்து சூப்பர் ஸ்டார் லியோனல் மெஸ்ஸி(Lionel Messi) இன்று கொல்கத்தா(Kolkata ) வந்தடைந்தார்.
‘GOAT India Tour 2025’ என்ற சுற்றுப்பயணத்திற்காக மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.
இதனையடுத்து கொல்கத்தாவில் லேக் டவுன்(Lake Town) பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டு கிளப்(Sribhoomi Sports Club) சார்பில் 70 அடி உயரத்தில் நிறுவப்பட்ட தனது உருவச்சிலையை மெஸ்ஸி காணொலி மூலம் திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து சால்ட்லேக்(Salt Lake) மைதானத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் போது மெஸ்ஸிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், மெஸ்ஸியை காண 5,000 முதல் 12,000 ரூபாய் வரை நுழைவு சீட்டு எடுத்து ரசிகர்கள் வந்துள்ளனர். ஆனால் உடனே கிளம்பியதால் ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர்.
இதனால் கோபமடைந்த ரசிகர்கள் மைதானத்தில் தண்ணீர் பாட்டில்களை எறிந்தும் மேடையை உடைத்தும் வன்முறையில் ஈடுப்பட்டனர்.
இதனால் மெஸ்ஸி கலந்துகொண்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் நுழைவு கட்டணத்தை திருப்பித் தருவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதியளித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்தி
மெஸ்ஸியின் வருகையால் விழாக்கோலம் பூண்ட கொல்கத்தா நகரம் – உச்சக்கட்ட பாதுகாப்பு!





