பூசா சிறைச்சாலையில் வெடித்த கலவரம் – கண்காணிப்பாளர் படுகாயம்!
பூசா சிறைச்சாலையில் இன்று ஏற்பட்ட கலவரத்தில் சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
பூசா சிறைச்சாலையின் கைதிகள் குழு ஒன்றை வேறு அறைகளுக்கு மாற்ற முயன்றபோது இந்த கலவரம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைதிகள் இடமாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதோடு, கைதிகள் நடத்திய தாக்குதலில் சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், தற்போது நிலைமை சீராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





