இலங்கை மருத்துவ துறையில் புரட்சி – நீரிழிவு கண்காணிப்புக்காக புதிய தொழில்நுட்பம் அறிமுகம்
இலங்கையில் முதற்தடவையாக, தொடர்ச்சியான குளுக்கோஸ் கண்காணிப்பு (CGM) திட்டமொன்றை ட்ராபெஸ் பார்மா ஹோல்டிங்ஸ் (Trapez Pharma Holdings) நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை நவீனமயமாக்கும் முயற்சியின் ஓர் அங்கம் இதுவாகும்.
இதற்காக, சீனாவில் தயாரிக்கப்பட்ட “Ainuo O” என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது.
“தொழில்நுட்பத்தின் வாயிலாக நீரிழிவு பராமரிப்பில் மாற்றத்தை ஏற்படுத்தல்” என்ற தொனிப்பொருளில் சமீபத்தில் கொழும்பில் இடம்பெற்ற மருத்துவ மாநாட்டில், குறித்த தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது.
இதன் கீழ், கைகளில் குத்தி இரத்தத் துளிகளைப் பெறும் ஊசிகளுக்குப் பதிலாக ஒரு சென்சர் கருவியின்மூலம் குளுக்கோஸ் மட்டம் கணிக்கப்படும்.





