ரெட்ரோ படம் பட்ஜெட், கலெக்ஷன் குறித்து வெளியான செய்தி

கடந்த வருடம் சூர்யாவின் நடிப்பில் அனைவரும் எதிர்ப்பார்த்த கங்குவா படம் வெளியாகி இருந்தது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாரான இப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமையும் என்று பார்த்தால் லாபத்தை கூட எட்டாத நஷ்டமான படமாக முடிந்தது.
ரூ. 300 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் தயாரித்திருந்தது.
இப்படத்தை தொடர்ந்து சூர்யா நடித்த படம் தான் ரெட்ரோ. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவை தாண்டி பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
கங்குவா படம் பெரிய பட்ஜெட்டில் எடுத்த நஷ்டத்தை எட்டவே இந்த ரெட்ரோ படம் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ரூ. 65 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இந்தியாவில் மட்டுமே ரூ. 12 முதல் ரூ. 15 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதேபோல் மொத்தமாக முதல் நாளில் இப்படம் ரூ. 20 கோடி வரை வசூலிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.