சீனாவில் திருமண நிகழ்ச்சிகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்வு – மகிழ்ச்சியில் மக்கள்
சீனாவில் திருமண நிகழ்ச்சிகளுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதாகச் சீன அரசாங்கம் அறிவித்துள்ளது.
மணமக்களின் சொந்த இடங்களில் மட்டுமே திருமண விழாவை நடத்த இதுவரை அனுமதி இருந்தது.
இந்த நிலையில், இப்போது நாட்டின் எந்தவொரு இடத்திலும் திருமண விழாவை நடத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த அறிவிப்பு திருமண விழா கொண்டாட்டங்களுக்குப் புதிய வடிவத்தைத் தந்துள்ளதாகச் சீன மக்கள் தெரிவித்துள்ளனர்.
இனி ரயில் நிலையங்கள், சொகுசு விடுதிகள், மலைச் சிகரங்கள் என விதவிதமான இடங்களில் திருமண விழா நடத்தும் திட்டங்களையும் வணிக நிறுவனங்கள் அறிவித்துள்ளன.





