இலங்கையில் வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடு? மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்
இலங்கையில் வாகன இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் அல்லது மத்திய வங்கி எந்த முடிவையும் எடுக்கவில்லை என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது அவர் கூறியதாவது:
திறக்கப்பட்டுள்ள சந்தை தொடர்ந்து திறந்திருக்கும். அரசாங்கத்துக்கு இவ்வேளை அதனை மாற்றும் நோக்கம் இல்லை. எனக்குத் தெரிந்தவரை, மத்திய வங்கியிலும் அத்தகைய திட்டமோ ஆலோசனையோ இல்லை. மேலும், அதற்கான மாற்றம் செய்யப்படாது என அமைச்சர் ஒருவர் தெரிவித்திருந்தார்.”
இதன் மூலம், வாகன இறக்குமதிக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என பரவும் ஊகங்களுக்கு முடிவு கிடைத்துள்ளதாகக் காணப்படுகிறது.





