விமானங்களில் பவர் பேங்க் எடுத்துச் செல்ல கட்டுப்பாடு
விமானப் பயணங்களின் போது லித்தியம் பேட்டரிகளால் ஏற்படும் தீ விபத்துகளைத் தவிர்க்க, பவர் பேங்க் (Power bank) பயன்பாட்டிற்கு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இனி விமானத்தில் பயணம் செய்யும் போது கையடக்கத்தொலைபேசி அல்லது மடிக்கணினிகளை பவர் பேங்க் மூலம் சார்ஜ் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 100 வாட் அல்லது 27,000 mAh திறனுக்குக் குறைவான பவர் பேங்குகளை மட்டுமே பயணிகள் எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. இவற்றை செக்-இன் (Check-in) பொதிகளில் வைக்காமல், கைப் பைகளிலேயே வைத்திருக்க வேண்டும் என்றும், இருக்கைக்கு மேல் உள்ள கேபின்களில் வைக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கருதி கொண்டு வரப்பட்டுள்ள இந்த விதிகளை பயணிகள் முறையாகப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்





