தெஹிவளை துப்பாக்கிச் சூடு – உரிமையாளர் உயிரிழப்பு
தெஹிவளை, கடற்கரை வீதி (மெரின் டிரைவ்) பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அதன் உரிமையாளர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் இன்று (09) இரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த ஹோட்டலுக்கு முன்பாக மது அருந்திக்கொண்டிருந்த இருவர், அந்த ஹோட்டலின் உரிமையாளரின் தலையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது படுகாயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





