சீனாவில் பதுங்கு குழியில் செயல்படும் உணவகம் – வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பு

சீனாவின் சோங்கிங் நகரில் பூமிக்கடியில் செயல்படும் ஒரு தனித்துவமான உணவகம், வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
2ஆம் உலகப் போர் காலத்தில் பதுங்கு குழியாக பயன்படுத்தப்பட்ட இந்த இடம், இப்போது சுவையான உணவுகள் பரிமாறும் இடமாக மாறியுள்ளது.
இந்த உணவகம், வெப்பக்காற்று சூழ்ந்த நகரத்தில் குளிர்ச்சியான சுழலை வழங்கும் இடமாக மாறியுள்ளது.
வெளியில் வெப்பம் 40 பாகை இருக்கும் போதிலும், உணவகத்துக்குள் 25 பாகை என்ற குளிர்ந்த சூழ்நிலை நிலவுகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு நிம்மதியையும் புதிய அனுபவத்தையும் அளிக்கிறது.
520 மீட்டர் நீளத்தில் அமைந்துள்ள இந்த உணவகத்தில் 280 மேசைகள் வாடிக்கையாளர்களுக்காக இடம் பெற்றுள்ளன.
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை இங்கு வந்துசெல்லும் தரிசனமாகியுள்ளது. பிறந்தநாள் விழா போன்ற கொண்டாட்டங்களுக்கும் இது முதன்மையான இடமாக விளங்குகிறது.
சோங்கிங் நகரத்தில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட பழமையான பதுங்கு குழிகள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவற்றில் சில இந்த உணவகம்போன்று புதுப்பித்து புதிய பயன்பாடுகளுக்குத் தயாராகின்றன.
இத்தகைய முயற்சி, வரலாற்றுச் சிறப்புகளையும், நவீன வசதிகளையும் இணைக்கும் புதுமையான வழியாக பார்க்கப்படுகிறது.