கட்டுநாயக்கா விமான நிலையத்தின் பாதுகாப்பு இயந்திரங்களை அகற்ற தீர்மானம்!
வெளிநாடு செல்லும் பயணிகளின் வசதிக்காக பாதுகாப்பு நடைமுறைகளை இலகுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலைய புறப்படும் முனையத்தின் நுழைவு வாயிலுக்கு அருகில் இருந்த ஸ்கேனிங் இயந்திரத்தை அகற்ற தீர்மானித்துள்ளதாக நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இருப்பினும், ஒவ்வொரு பயணிகளும் விமானத்தில் ஏறுவதற்கு முன் இரண்டு புள்ளிகளில் சிறப்பு ஸ்கேன் செய்யப்படுவார்கள் என்றும் நிறுவனம் கூறுகிறது.
நாட்டில் தற்போது நிலவும் அமைதியான சூழ்நிலை மற்றும் வெளிநாடுகளுக்கு பயணிக்கும் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு விமான நிலையமும் விமான சேவையும் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 18 times, 1 visits today)





