உலகம் செய்தி

காசா போரை முடிவுக்கு கொண்டுவர தீர்மானம் – ஹமாஸ் சாதகமாக பதிலளிப்பு

காஸா பகுதியில் போரை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேல் முன்வைத்துள்ள புதிய பிரேரணையை ஹமாஸ் ஏற்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நேரம் இது என்பதை வலியுறுத்தி அமெரிக்க ஜனாதிபதி இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புதிய மூன்று பகுதி அமைதித் திட்டம் ஆறு வார போர்நிறுத்தத்துடன் தொடங்கும், இதன் போது இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் காசா பகுதியில் தங்கள் நிலைகளில் இருந்து விலகும்.

மேலும், பலஸ்தீன கைதிகளுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவது மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பது குறித்தும் இந்த திட்டத்தின் கீழ் விவாதிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பகைமையை முடிவுக்குக் கொண்டு வருவதோடு காசா பகுதியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான புதிய திட்டத்தை தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி பைடனின் முன்மொழிவுக்கு ஹமாஸ் சாதகமாக பதிலளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

(Visited 8 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி