தெற்கு பாகிஸ்தானில் இடிந்து விழுந்த குடியிருப்பு கட்டட தொகுதி – இதுவரை 16 பேரின் உடல்கள் மீட்பு!

தெற்கு பாகிஸ்தானில் இடிந்து விழுந்த கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
மீட்புப் பணியாளர்கள் இரவு முழுவதும் நடத்தப்பட்ட நடவடிக்கையின் போது இடிபாடுகளில் இருந்து மேலும் 10 உடல்களை மீட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு நடத்தும் சிவில் மருத்துவமனை ஒரு அறிக்கையில் 16 உடல்களைப் பெற்றுள்ளதாகவும், காயமடைந்தவர்களில் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
உள்ளூர் ஊடகங்கள் மற்றும் அவசரகால அதிகாரிகளின் கூற்றுப்படி, இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று நம்பப்படும் குறைந்தது எட்டு உயிர் பிழைத்தவர்களைத் தேடுவதற்கு மீட்புப் பணியாளர்கள் கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
(Visited 1 times, 1 visits today)