குணப்படுத்த முடியாத புற்றுநோய்க்கான புதிய சிகிச்சை முறையை கண்டுபித்த ஆராய்ச்சியாளர்கள்
பிளிண்டர்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குணப்படுத்த முடியாத புரோஸ்டேட் புற்றுநோய்க்கான புதிய சிகிச்சை முறையை கண்டுபிடித்துள்ளனர்.
British Journal of Cancer சஞ்சிகையில் வெளியிடப்பட்ட தகவலுக்கமைய இந்த ஆய்வில், வழக்கமான சிகிச்சைகள் மற்றும் மருந்துகளுக்குப் பதிலளிக்காத புரோஸ்டேட் புற்றுநோய்க்கு வழங்கக்கூடிய புதிய மருந்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகக் கூறுகிறது.
புரோஸ்டேட் புற்றுநோய் என்பது ஆஸ்திரேலியாவில் ஆண்களிடையே பொதுவாகக் கண்டறியப்பட்ட புற்றுநோயாகும், ஒவ்வொரு ஆண்டும் 3,300 ஆண்கள் இறக்கின்றனர்.
CDKI-733 என்ற புதிய மருந்தின் மூலம் புரோஸ்டேட் புற்றுநோய் செல்கள் வளர்ச்சி மற்றும் சுரப்பியின் உயிர்வாழ்வதில் முக்கிய பங்கு வகிக்கும் Cyclin-Dependent Kinase 9 (CDK9) எனப்படும் குறிப்பிட்ட புரதத்தை குறிவைப்பதே ஆராய்ச்சியாளர்களின் நோக்கமாகும்.
புதிய மருந்து அந்த புரதத்தின் சக்தியைத் தடுத்து, தற்போதுள்ள சிகிச்சைகள் மூலம் புற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவும் என்று கூறப்படுகிறது.
இந்த ஆய்வுக்கு ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் லூக் செல்த் மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஷுடாங் வாங் ஆகியோர் தலைமை தாங்கினர்.
CDKI-73 மருந்து மற்ற சாதாரண செல்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் புற்றுநோய் செல்களை குறிவைக்கிறது என்பதை அவர்கள் காட்டுகிறார்கள்.