உலகம் செய்தி

நியூசிலாந்தில் வரலாறு காணாத கனமழை ; மண்சரிவில் பலர் மாயம்

நியூசிலாந்தின் வடக்குத் தீவில் பெய்த வரலாறு காணாத கனமழை மற்றும் சூறாவளியால் மண்சரிவில் சிக்கி, ஒரு சிறுமி உட்பட பலர் காணவில்லை என அஞ்சப்படுகிறது.

ஐந்து பிராந்தியங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மவுண்ட் மௌங்கனுய் பகுதியில் உள்ள சுற்றுலா முகாமில் இன்று காலை பெரும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், அவசரகாலத் துறை அமைச்சர் மார்க் மிட்செல், பாதிக்கப்பட்ட பகுதிகள் “போர் மண்டலத்தைப் போல” இருக்கின்றன என தெரிவித்தார்.

தீயணைப்பு துறையினர், மண்ணுக்குள் புதைந்தவர்களிடமிருந்து உதவி கோரும் குரல்கள் கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் குடும்பங்களை வானூர்திகள் மூலம் மீட்டு வருகின்றனர்.

மண் ஏற்கனவே ஈரப்பதத்துடன் உள்ளதால், மேலும் மழை பெய்தால் மரம் விழுதல் மற்றும் கூடுதல் மண்சரிவுகள் ஏற்படக்கூடும் என தேசிய அவசர மேலாண்மை முகமை எச்சரித்துள்ளது.

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!