அமெரிக்காவில் விமானத்தின் இன்ஜினுக்குள் இருந்து நபரின் சடலம் மீட்பு!
அமெரிக்காவைச் சேர்ந்த 30 வயது நபர் ஒருவர் கடந்த திங்கள்கிழமை இரவு சால்ட் லேக் சிட்டி சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தின் இன்ஜினுக்குள் உயிரிழந்து கிடந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
பார்க் சிட்டியைச் சேர்ந்த கைலர் எஃபிங்கர், பயணிகளை ஏற்றிச் சென்ற வணிக விமானத்தின் இறக்கையில் பொருத்தப்பட்டிருந்த என்ஜினுக்குள் இறந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எஃபிங்கர் அவசரகால வெளியேறும் கதவை உடைத்து, டார்மாக்கில் நடந்து சென்று என்ஜினுக்குள் ஏறியிருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர்.
அவரது மரணத்திற்கான காரணம் தெளிவாக இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
(Visited 5 times, 1 visits today)