நியூயார்க்கில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட 13 அடி மலைப்பாம்பு மீட்பு
நியூயார்க்கில் ஒரு வீட்டில் பாரிய பர்மிய மலைப்பாம்பு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பாம்பு 13 அடி 2 அங்குலம் நீளமும், 36 கிலோ எடையும், உரிமையாளரால் கையாள முடியாத அளவுக்கு பெரியதாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரியான(ECO) ஜெஃப் ஹல், பாம்பை பர்மிய மலைப்பாம்பு என்று அதன் தலையில் உள்ள ஒரு அம்புக்குறியைப் போன்ற ஒரு அம்சத்தால் அங்கீகரித்தார்.
மேலும், “பர்மிய மலைப்பாம்புகள் அனுமதியின்றி நியூயார்க் மாநிலத்தில் வைத்திருப்பது சட்டவிரோதமானது” என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.
வனவிலங்குகளை செல்லப் பிராணியாக வளர்ப்பதற்கும், ஆபத்தான உயிரினங்களை அனுமதியின்றி வீட்டில் வைத்திருப்பதற்கும் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட பாம்பு, நியூயார்க்கில் உள்ள ரோம் நகரில் உள்ள ஃபோர்ட் ரிக்கி டிஸ்கவரி மிருகக்காட்சிசாலைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.