இலங்கையில் சில வாகனங்களுக்கான இறக்குமதிக்கான தடை நீக்கம்?

இலங்கையில் பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, இந்த வாரம் அதற்கான வர்த்தமானி அறிவிப்பை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் லொறிகள், டிரக் மற்றும் பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் இந்த வர்த்தமானி மூலம் தளர்த்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
(Visited 9 times, 1 visits today)