இலங்கை

இலங்கையில் யுவதியின் உயிரை பறித்த ஊசி மருந்து பாவனையிலிருந்து நீக்கம்

பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதிக்கு செலுத்தப்பட்ட ஊசி மருந்தினை பாவனையிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்தார்.

குறித்த யுவதியின் மரணத்திற்கான உறுதியான காரணத்தை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய விசாரணைக்குழுவின் உறுப்பினர்கள் தற்போது வைத்தியசாலைக்கு சென்று தமது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

எவ்வாறாயினும், சமோதி சந்தீபனி எனும் குறித்த யுவதிக்கு ஊசி மருந்து செலுத்தப்பட்ட நாளில் மேலும் 12 பேருக்கு அதே ஊசி மருந்து செலுத்தப்பட்டதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 2715 பேருக்கு இந்த ஊசி மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த ஊசி மருந்தானது 2013 ஆம் ஆண்டு முதல் நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!