5,000 ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிகத்தைச் சேர்ந்த பெண்ணின் உடல் எச்சங்கள் மீட்பு
5,000 ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிகத்தைச் சேர்ந்த பெண்ணின் உடல் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பெரு நாட்டில், 5,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கேரல் நாகரிகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் உடல் எச்சங்களையே தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
தலைநகர் லிமாவுக்கு வடக்கே உள்ள சூப் மாவட்டத்தில் ஆஸ்பெரோ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில், பெண்ணின் நகங்கள், முடி, தோல் பாகங்கள் பாதுகாக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டன.
உயிர் மானுடவியல் பகுப்பாய்வுகளின்படி உயிரிழந்த போது அந்தப் பெண்ணுக்கு 20 முதல் 35 வயதிருக்கலாம் என தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
அகழாய்வில் மேலும் பல பழங்காலப் பொருள்களும் கண்டெடுக்கப்பட்டன.
(Visited 33 times, 1 visits today)





