ஹமாஸ் வசமுள்ள பணயக் கைதிகளை மீட்க வலியுறுத்தி டெல் அவிவில் உறவினர்கள் போராட்டம்

உடல் மெலிந்து, மனநல பாதிப்புடன் பதுங்குகுழியில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இரு இஸ்ரேலிய பணயக் கைதிகளைப் பற்றி ஹமாஸ் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, ஹமாஸ் வசமுள்ள பணயக் கைதிகளை மீட்கவும், காசா போரை நிறுத்தவும் வலியுறுத்தி, கைதிகளின் உறவினர்கள் டெல் அவிவ் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வீடியோவில் காணப்பட்ட பணயக் கைதி பிரஸ்லாவ்ஸ்கியின் தந்தை போராட்டத்தில் கலந்து கொண்டு, “என் கண்முன் என் மகன் உயிரிழக்கிறான். அதை அனைவரும் பார்க்கிறார்கள்.
ஆனால் பிரதமர் அவனை காப்பாற்ற எந்த முயற்சியும் செய்யவில்லை,” என்று உருக்கமாக பேசினார்.
(Visited 3 times, 3 visits today)