இந்தியாவுடனான உறவு தொடரும்: ரஷ்யா திட்டவட்டம்!
தமது நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்துவது தொடர்பில் இந்தியாவிடமிருந்து எதுவும் அறிவிக்கப்படவில்லை என ரஷ்யா Russia தெரிவித்துள்ளது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அந்நாட்டு செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் Dmitry Peskov மேற்படி தகவலை வெளியிட்டார்.
“ இந்தியாவுடனான India உறவை அனைத்து நிலைகளிலும் தொடர்ந்து மேம்படுத்தவே ரஷ்யா விரும்புகிறது” எனவும் அவர் கூறினார்.
அதேவேளை, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தங்களை ரத்து செய்வது தொடர்பான எந்தவொரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்று ரஷ்ய எரிசக்தி அமைச்சு வட்டாரங்களும் தெரிவித்துள்ளன.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா நிறுத்திவிட்டது என அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், இந்தியாமீது விதிக்கப்பட்ட வரியையும் குறைக்கும் அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





