தமிழ்நாடு

காதலுக்கு மறுப்பு…பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட இளப்பெண்

தமிழக மாவட்டம், திருநெல்வேலியில் காதலிக்க மறுத்த 18 வயது இளம்பெண் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி டவுன் கீழ ரத வீதியில் பேன்சி ஸ்டோரில் சந்தியா (18) என்ற பெண் வேலை பார்த்து வந்தார். இவர், தனது குடும்ப சூழ்நிலை காரணமாகவும், வறுமையின் காரணமாகவும் அங்கு வேலை செய்து வந்துள்ளார்.இந்நிலையில், இளைஞர் ஒருவர் சந்தியாவை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர், சந்தியாவிற்கு அடிக்கடி தொல்லை தந்துள்ளார். ஆனால், சந்தியா இளைஞரின் காதலை ஏற்க மறுத்துள்ளார்.

ஒரு கட்டத்திற்கு மேல் தனது உறவினர்களிடம் சந்தியா இது குறித்து கூறியுள்ளார். அவர்கள், அந்த இளைஞரை கண்டித்தும், சந்தியாவிற்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.இந்நிலையில், வழக்கம்போல் சந்தியா வேலைக்கு வந்துள்ளார். அப்போது அவர், குடோனுக்கு சென்று பொருள்களை எடுப்பதற்காக திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில் வழியாக சென்றுள்ளார்.

அப்போது அந்த இளைஞர், சந்தியாவை துரத்தியதாக கூறப்படுகிறது. சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் நடமாடும் இடத்தில், வாகனங்கள் செல்லும் நிலையில் அரிவாளை வைத்து சந்தியாவை இளைஞர் வெட்டி படுகொலை செய்துள்ளார்.இந்த கொலைக்கு காரணம், காதல் பிரச்சனை தான் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, நெல்லை டவுன் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Mithu

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்
error: Content is protected !!