அரசு மதுபான கடையில் இரண்டாயிரம் ரூபாய் வாங்க மறுப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பட்டு செல்லும் சாலையில் கடை எண் 9222 அரசு மதுபானக்கடை இயங்கி வருகின்றது.
கடந்த 19 ஆம் தேதி இரண்டாயிரம் ரூபாய் நோட்டு புழக்கத்திலிருந்து நிறுத்தப்படுவதாகவும் மே 23ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 30 ஆம் தேதி வரையில் வங்கிகளில் நாள் ஒன்றிற்கு 20,ஆயிரம் ரூபாய் மாற்றி கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில் அனைத்து விற்பனை நிலையங்கள் பெட்ரோல் பங்குகள் சூப்பர் மார்க்கெட் வணிக வளாகங்கள் அரசு பேருந்து அரசு மதுபானக் கடைகளில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் வாங்களாம் என அரசு அறிவுறுத்தியது.
இந்நிலையில் செங்கம் புதுப்பட்டு சாலையில் உள்ள அரசு மதுபானக்கடையில் மதுப்பிரியர் ஒருவர் 2ஆயிரம் ரூபாய் நோட்டு கொடுத்து மது வாங்க சென்றபோது கடை விற்பனையாளர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு தடை செய்யப்பட்டுள்ளதால் வாங்க முடியாது என கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மதுப்பிரியர் விற்பனையாளரிடம் யார் உங்களிடம் 2 ஆயிரம் ரூபாய் வாங்க கூடாது என கூறியது என வாக்கு வாதத்தில் ஈடுபடாதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கம் போலீசார் மதுப்பிரியரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அவரை அழைத்து சென்றனர்.