பிரித்தானியா நோக்கிச் சென்ற அகதிகளின் பரிதாப நிலை – இடைநடுவில் மரணித்த பரிதாபம்

பிரான்ஸில் இருந்து பிரித்தானியா நோக்கிச் செல்லும் அகதிகளின் முயற்சி இடைநடுவில் மரணத்தில் முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸின் பா து கலே கடற்பகுதியில் இரு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
ferry ஆங்கிலக்கால்வாயில் இந்த சடலங்கள் மிதப்பதைப் பார்த்துவிட்டு கடற்படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளது.
இதை அடுத்து பிரெஞ்சு கடற்படையினர் குறித்த 2 சடலங்களையும் மீட்டனர். கடந்த சில நாட்களாக தண்ணீரில் மூழ்கி உடல் வீங்கியிருந்த நிலையில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உடற்கூறு விசாரணைகளுக்காக சடலங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
(Visited 13 times, 1 visits today)