எரிபொருள் விலை குறைப்பு போதாது
எரிபொருள் விலையை குறைப்பது போதாது என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
நேற்று (04) நள்ளிரவு முதல் 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 9 ரூபாவினாலும், சிலோன் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 05 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பெரும்பாலும் பயன்படுத்தப்படும் 92 ஒக்டேன் பெற்றோல் மற்றும் சிலோன் ஒயிட் டீசல் ஆகியவற்றின் விலை திருத்தப்படவில்லை.
தேவையான எரிபொருளின் விலை தாம் உணரும் சதவீதத்தினால் குறைக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதேவேளை, மின் கட்டண குறைப்பின் நன்மை இன்று (05) முதல் மக்களுக்கு வழங்கப்படும் என அகில இலங்கை உணவக மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்தார்.
ஆனால், மின்கட்டணத்தை உயர்த்திய சில சங்கங்கள் கட்டணம் குறைக்கப்படும்போது மௌனப் போக்கை கடைபிடிக்கின்றன.
மின்கட்டணம் மிக அதிக சதவீதம் குறைக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில், பேக்கரி உரிமையாளர்களும் தங்களது பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என தேசிய நுகர்வோர் முன்னணி மாவட்ட அமைப்பாளர் கே. பி. ஹேரத் தெரிவித்தார்.
மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்பட்ட போதிலும் தமது சேவைகளின் விலையை உடனடியாகக் குறைக்க முடியாது என அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திரஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.