இலங்கை செய்தி

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் காணியில் ஆயுதங்கள் மீட்பு

வெல்லவாய, ஏக கன்வன்வ பிரதேசத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீடு அமைந்துள்ள காணியில் ஆயுதக் குவிப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புத்தல முகாமின் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த ஆயுதங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

இரண்டு கைக்குண்டுகள், இரண்டு துப்பாக்கிகள், ஒரு குண்டு துளைக்காத உடுப்பு, இருபத்தி இரண்டு தோட்டாக்கள் மற்றும் ஒரு கத்தி ஆகியவை அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் அந்த வீட்டில் இருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் வெல்லவாய பொலிஸ் நிலையத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 8 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை