சீனாவின் ஷாங்காய் நகரில் வரலாறு காணாத பனிப்பொழிவு – சில சாலைகள் மூடல்!
சீனாவின் ஷாங்காய் நகரில் வரலாறு காணாத பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.
மிகவும் குளிரான வானிலை நிலவி வருவதால், நகரின் சில சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சீனாவில் சுமார் 12 மாகாணங்களில் கடுமையான குளிர் நிலவுவதாகவும், இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜனவரி 2018 க்குப் பிறகு ஷாங்காய் நகரில் இதுபோன்ற பனிப்பொழிவு ஏற்படுவது இதுவே முதல் முறை.





