ஐரோப்பா

ஜெர்மனியில் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு பரிந்துரை!

ஜெர்மனி அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் அடிப்படை சம்பளமானது 12 யூரோவாக காணப்படுகின்றது. இதேவேளையில் அடிப்படை சம்பளத்தை உயர்த்த வேண்டுமா? இல்லையா? என்பது பற்றி ஆராய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது ஜெர்மன் அரசாங்கமானது அடிப்படை சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று பரிந்துரைத்து இருக்கின்றது. அதாவது வருகின்ற வருடம் முதல் அடிப்படை சம்பளமானது 11 யுரோ 41 சென்ட் ஆக இருக்க வேண்டும் என்றும்,

இந்த அடிப்படை சம்பளமானது 12 யூரோ 58 சென்ட் ஆக இருக்க வேண்டும் என்றும் இந்த குழுவானது பரிந்துரைத்து இருக்கின்றது. இந்நிலையில் எஸ் பி டி என்று சொல்லப்படுகின்ற சமூக ஜனநாயகம் கட்சியினுடைய பொது செயலாளர் கிளின் பையில் அவர்கள் ஜெர்மன் அரசாங்கத்தில் அடிப்படை சம்பளமானது 14 யூரோவாக உயர்த்த வேண்டும் என்ற தனது கருத்தை முன்மொழிந்துள்ளார்.

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியமானது வெகுவிரைவில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அடிப்படை சம்பளமானது 13 யுரோ 50 சென்ட் ஆக பரிந்துரைக்கவுள்ள நிலையில் இவ்வாறு எஸ் பி டி கட்சியானது வேண்டுதலை விடுத்து இருக்கின்றது.

அதாவது ஐரோப்பிய ஒன்றியமானது அடிப்படை சம்பளம் மணித்தியாலத்துக்கு 13 யூரோ 50 சென்ட ஆக பரிந்துரைத்தால் ஜெர்மனியில் 14 யூரோவை பரிந்துரைப்பது மிகவும் கஷ்டமான விடயம் அல்ல என இவர் முன்மொழிந்துள்ளார்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!