புதிய சீரியலில் கமிட்டாகிய சிறகடிக்க ஆசை ரவி… அட இந்த கதையா?
 
																																		சன் டிவி சீரியல்களுக்கு டாப் கொடுக்கும் வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை.
சீரியல் தொடங்கப்பட்ட நாள் முதல் அடுத்தடுத்து விறுவிறுப்பான கதைக்களத்துடன் டிஆர்பியிலும் டாப்பில் இருந்து வருகிறது சிறகடிக்க ஆசை.
இந்த சீரியலில் உள்ள ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் மக்களுக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டனர்.
அதிலும் முத்து – மீனாவின் ஜோடி சூப்பராம். அதேபோல் ரவி – சுருதியும் கியூட்டான ஜோடிதான்.

ரவி கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடம் ரீச் ஆனவர் தான் பிரணவ். இவர் மற்ற தொலைக்காட்சி தொடர்களிலும் கமிட்டாகி நடித்து வந்தார்.
இந்த நிலையில் விஜய் டிவியிலேயே புதிய தொடர் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
அதாவது சமீபத்தில் தொடங்கப்பட்ட மகளே என் மருமகளே என்ற சீரியலில் நவீன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பிரணவ்.
இது தொடர்பான எபிசோட்கள் இனிவரும் எபிசோட்களில் பார்க்கலாம்.

 
        



 
                         
                            
