இலங்கை

இலங்கையில் வேகமாக பரவி வரும் எலிக் காய்ச்சல்!

குருநாகல் கனேவத்த மகுல்வெவ கிராமத்தைச் சேர்ந்த இருவர் எலிக்காய்ச்சல் காரணமாக கடந்த 09 ஆம் திகதி உயிரிழந்துள்ளனர்.

38 மற்றும் 39 வயதுடைய குறித்த நபர்கள் அப்பகுதியில் உள்ள கிரிந்திவெல்மட குளத்தில் நீராடியபோது தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதேபோல் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 12 பேர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர்மட்டம் குறைவாக இருக்கும் ஏரிகளுக்கு மீன்பிடிப்பதற்கும் குளிப்பதற்கும் மக்கள் வருவதால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே குறைந்த நீர் உள்ள ஏரிகளில் இருந்து நீர் அருந்துவதை தடுக்குமாறும், நீச்சல், மீன்பிடித்தல் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் எனவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!