செய்தி

திருமணம் முடிந்த கையோடு விருது! நெகிழ்ந்துபோன ராஷ்மிகா

நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு தெலங்கானா மாநில விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் தனது X பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

அதில், “நான் சிறு வயதாக இருந்தபோது யாராவது ஒரு மாநில அளவிலான விருதை வென்றால் அவர்களை சூப்பர் ஸ்டார்களாக பார்த்தேன். அவர்கள் எப்படி இதை சாதித்தார்கள், தினமும் என்ன செய்வார்கள் என நினைத்து ஆச்சரியப்படுவேன். நேற்று மாலை நான் மாநில அளவிலான விருது பெற்றது சிறப்பான தருணமாக இருந்தது.

அந்த உணர்வுகளை வார்த்தைகளில் சொல்ல முடியவில்லை. நான் நீண்ட தூரம் வந்துவிட்டதாக உணர்கிறேன்.

பெருமையும், மகிழ்ச்சியும், திருப்தியும் கலந்த ஒரு உணர்வு இருக்கிறது. இந்த ஆண்டு இவ்வளவு அழகாக தொடங்கியிருக்கிறது. அதிலும் தெலுங்கானா மாநில விருதுடன் என்னை வரவேற்றதற்கு நன்றி” என குறிப்பிட்டிருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

Mahi

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!