அமெரிக்காவில் ஆபத்தாக மாறும் மூளையை உண்ணும் அரியவகை அமீபா – யுவதி பலி

அமெரிக்காவில் மூளையை உண்ணும் அரிய வகை நோயால் 17 வயது யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த நோய் ஒருவருக்கு ஏற்பட்டால் மூளையில் உள்ள திசுக்கள் மற்றும் நரம்புகளை நேரடியாக தாக்குகிறது. அதனால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
ஏரி மற்றும் குளம் போன்ற நீர் நிலைகளில் வாழும் அமீபா மூலம் எந்த நோய் பரவுவதாக எச்சரித்துள்ளனர்.
அசுத்தமான தண்ணீரில் குளிக்கும் போது மூக்கு வழியாக அமீபா உடலுக்குள் சென்று நோயை ஏற்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிகுறிகளாக காய்ச்சல் கடுமையான தலைவலி வாந்தி தூக்கமின்மை சுவையில் மாற்றம் மற்றும் மாறுபட்ட மனநிலை போன்றவை ஏற்படுகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணத்தில் கடந்த மாதம் ஜூலை 11ம் திகதி மேகன் எபென்ரோத் என்ற 17 வயதான இளம் பெண் தனது தோழிகளுடன் அருகிலுள்ள குளத்தில் குளித்துள்ளார்.
அதன் பின்னர் வீட்டிற்கு வந்த பிறகு கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவருக்கு எதனால் தலைவலி ஏற்பட்டது என்பது தெரியவராத நிலையில் ஜூலை 21ஆம் தேதி தான் அமீபா நோய்க் கிருமியால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் அதற்கு அடுத்த நாளே இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சமீபத்தில் 13 வயது சிறுவன் இதே தொற்றால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.