ரஜினியின் எந்திரன் 3ஆம் பாகம் வெளிவருமா?

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து 2010 ஆம் ஆண்டு வெளியான எந்திரன் படம் பெரிய வெற்றி பெற்றது.
இதில் வசீகரன், சிட்டி ஆகிய இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். தொடர்ந்து எந்திரன் இரண்டாம் பாகம் 2.0 என்ற பெயரில் வெளியானது.
இந்த படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து.
இந்த நிலையில் ரஜினியை வைத்து எந்திரன் படத்தின் மூன்றாம் பாகத்தை 3.0 என்ற பெயரில் படமாக்க ஷங்கர் ஆலோசித்து வருவதாக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.
எந்திரன் 3-ம் பாகம் உருவாக வேண்டும் என்று ரசிகர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனாலும் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.
(Visited 22 times, 1 visits today)