‘ரஜினி 173’ – படப்பிடிப்பு ஏப்ரலில் ஆரம்பம்!
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் ஏப்ரலில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படம் ‘ரஜினி173’. இதனை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார்.
இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. எனினும், படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை.
இந்நிலையில் ‘தாய் கிழவி’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட சிபி சக்கரவர்த்தி.
‘ரஜினி 173’ படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தின் இடையில் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.
இப்படத்தினை ஒரே கட்டமாக முடித்து, அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
’ரஜினி173’ படத்தினை முடித்துவிட்டு தான், கமலுடன் இணைந்து நடிக்கும் படத்தினை தொடங்க திட்டமிட்டுள்ளார் ரஜினி எனவும் தகவல் வெளியாகியுள்ளது.




